கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி – Kanakkampatti Siddhar Jeeva Samaathi

0
357

தற்போது தமிழக முழுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாக இருப்பது இந்த கணக்கம்பட்டி சித்தரின் ஜீவ சமாதி தான். பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான்.

Kanakkampatti Siddharஆனால் தற்போது அது மட்டுமல்லாமல் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியை பார்க்க மக்கள் தினந்தோறும் பங்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். யார் அந்த கணக்கம்பட்டி சித்தர் வாருங்கள் அவரைப் பற்றிய முழு வாழ்க்கை வரலாறு பார்ப்போம்.

கணக்கன்பட்டி சித்தரின் இயற்பெயர்: காளிமுத்து என்ற பழனிச்சாமி

கணக்கன்பட்டி சித்தர் பிறந்த ஊர்: பழனி

பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தான் இந்த கணக்கன்பட்டி என்னும் ஊர். தற்போது இருந்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு இங்கு ஒரு அழுக்கு துணிவுடன், எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி வந்தவர் தான் இந்த பழனிச்சாமி சித்தர்.

பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர், என் நேரமும் முருகப்பெருமான் மற்றும் அவருடைய பெருமைகளை கூறும் கதைகளையே அனைவரிடமும் கூறியும், அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றில் வந்தார். பச்சை நிறம் கொண்ட உடைகளை மட்டுமே விரிந்து வணங்கும் பழக்கம் உடையவர். மேலும் அவருடைய கையில் ஒரு அழுக்கு மூட்டையை எப்போதும் சுமந்து கொண்டே தெரிவார்.

இதனால் இவரை பைத்தியம் என்று எண்ணற்றோர் கல் எடுத்து அடித்து துரத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் வாழ்க்கை வரலாறு:

• திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கணக்கன்பட்டி என்னும் ஊர் அமைந்துள்ளது.

• கணக்கன்பட்டிக்கு தெற்கு இருந்து சரியாக மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் அமைந்து உள்ளது சித்தரின் ஜீவ சமாதி.

• ஆரம்பத்தில் சித்தரை காண ஒரு சில பக்தர்கள் மட்டுமே அங்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களின் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறவே.

• அவரின் புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி தற்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50,000 பக்தர்கள் வந்து தரிசிக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்த சித்தரின் ஆலயமாக இந்த கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

கணக்கன்பட்டி சித்தர் தோற்றம்:

1. இந்நேரமும் ஆளுக்கு நிறைந்த சட்டை மற்றும் குளிக்காத உருவத்தை கொண்டவர்தான் இந்த பழனிச்சாமி மூட்டை சுவாமிகள்.

2. மேலும் பச்சை நிற அழுக்கு சட்டை மற்றும் அதற்கு நிறைந்த ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு பழனி முதல் கணக்கம்பட்டி வரை சுற்றித்திரிவார்.

3. அவர் வாழ்ந்த காலத்தில் பல்வேறு நபர்கள் இவர் பைத்தியம் என்றும் மேலும் சிலரோ இவர் சித்தரின் அவதாரம் வேண்டுதலை நிறைவேற்றும் கடவுள் என்றும் அவரை வணங்கி வந்தனர்.

அழுக்கு மூட்டை சித்தர் என பெயர் வர காரணம்:

1. பழனி மற்றும் கணக்கன்பட்டி சுற்றுவட்டாரங்களில் இவர் அழுக்கு நிறைந்த மூட்டையை கையில் தூக்கிக் கொண்டு சுற்றியதால் இவர் அழுக்கு மூட்டை சித்தர் மக்கள் அழைக்க தொடங்கினர்.

2. ஆரம்ப காலத்தில் இவரை கண்ட பொதுமக்கள் இவர் ஒரு பைத்தியம் என்று சொல்லை எடுத்து அடுத்து தொடங்கினார்.

3. பழனியில் உள்ள இரண்டு பெரும் கோயில்களில் ஒன்றான இடும்பன் மலையில் தினமும் அமர்ந்து தவம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி – கணக்கம்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்:

ஆரம்ப காலத்தில் சித்தரின் அற்புதங்களைக் கண்டு பலர் அவருக்கு புதிய உடைகள் மற்றும் உண்ண உணவும் வாங்கி பல பேர் கொடுத்தனர். இதனை விரும்பாத சித்தர் அவர்களை அடித்து துரத்த ஆரம்பித்தார்.

சித்தரின் ஆலயத்திற்கு சென்றாலே ஒருவிதமான புதிய உணர்வுடன் கூடிய அதிர்வலைகள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும்.

ஒருமுறை ஒரு நபர் தன் மனதில் ஒன்று நினைத்துக் கொண்டு சித்தரின் இருக்கும் இடம் வழியாக எதற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சித்தர் கிழக்கு போய் வடக்கு போ என்று தெரிவித்துள்ளார்.

இவர் ஏதோ சொல்கிறார் என்று அதனை கண்டு கொள்ளாமல் சென்ற அந்த நபர். அடுத்த நாள் எதர்ச்சியாக அவருடைய ஊரிலிருந்து கிழக்குப் பக்கமாக சென்று பின்னர் வடக்கு பக்கம் உள்ள ஊருக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு ஒரு இடம் வாங்கி உள்ளார். தற்போது அந்த இடத்தில் அவருடைய வாழ்க்கை மிகவும் செல்வம் நிறைந்த வளர்ச்சி பெற்று செல்வதாக மாறி உள்ளார்.

பின்னர் சித்தரின் வார்த்தைகளை உணர்ந்த அவர் உடனே சித்தரை வந்து பார்த்துவிட்டு ஆசையும் பெற்று சென்றுள்ளார்.

ஒரு முறை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ள ஒரு வெளிநாட்டு தம்பதியினர் கணக்கம்பட்டி சித்தரால் அடைந்த பயன்தான் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் ஆகும்.

வெளிநாட்டை சேர்ந்த ஒரு தம்பதிக்கு தன்னுடைய மகன் பேச்சு திறமையை இழந்ததால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக அங்கிருந்து தமிழகத்திற்கு வந்துள்ளனர். சிகிச்சையில் எந்தப் பயனும் பெறாத அவர்கள் மன வருத்தத்துடன் பழனிமலை உள்ள முருகப்பெருமானை தரிசிப்பதற்காக சென்றுள்ளனர்.

அந்த வெளிநாட்டவர்கள் பழனியில் உள்ள முருகன் கோவிலை தரிசிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி சென்றுள்ளனர். அப்போது கணக்கம்பட்டி மலையாக செல்லும்போது சித்தரின் அருகில் சென்றதும் காரானது தானாக நின்று இருக்கிறது.

அப்போது காரை நிறுத்தி வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் சித்தர் அவர்களை அழைத்துள்ளார். அந்த காரில் இருந்த
பெண்மணியும் ஒருவித பயம் கலந்த தயக்கத்தோடு சித்தரை நோக்கி சென்று பேசி உள்ளார். அந்தப் பெண்மணி இடத்தில் சித்தரானவர் எதிரில் உள்ள கடைக்கு சென்று ஒரு பிரியாணி பொட்டணம் ஒன்று வாங்கி வா என்று கூறியுள்ளார்.

அருகில் உள்ள கடைக்கு சென்று பிரியாணி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். இதில் சங்கடமான விஷயம் என்னவென்றால் அந்த வெளிநாட்டு தமிழ் குடும்பத்தார் ஒரு சைவ சாப்பிடக்கூடியவர்கள் ஆகும். என்னை ஒரு பிரியாணி வாங்க சொல்கிறாரே என்று அந்த குடும்பத்தார்கள் ஒருவிதமான தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டு வந்துள்ளனர்.

சித்திர இடம் பிரியாணியை கொண்டு வந்த அந்த பெண்மணி இந்தாருங்கள் என்றார். உடனே சித்தர் அந்த பிரியாணி பொட்டணத்தை உங்களுடைய மகனுக்கு எடுத்துக் கொடு என்றார். தயக்கத்துடன் பொட்டணத்தை குறித்த அந்த பெண்மணி ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம். பிரியாணி வாங்கி வந்த அந்த பொட்டணத்தில் சாம்பார் சாதம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்த பெண்மணியை நோக்கி ஒரு மிகப்பெரிய வாகனம் வருவதைக் கண்ட அவருடைய மகன். அம்மா வண்டி வருது ஓரமா வாருங்கள் என்று கத்த தொடங்கினார்.

அப்போதுதான் அவர்களுக்கு புரிந்தது இவை அனைத்தும் சித்தரின் விளையாட்டுகள் என்று பிரியாணி வாங்கி வந்த பொட்டணம் சாம்பார் சாதமாக மாறியது மற்றும் வாய் பேசாத தன்னுடைய மகன் வாய் பேசியது இவை அனைத்தும் சித்தரின் மகிமையால் மிகுந்தவை என அவர் சென்ற இடத்தை நோக்கி கீழே விழுந்து வணங்கி விட்டு சென்றுள்ளனர் அந்த வெளிநாட்டு தம்பதியினர்.

கணக்கன்பட்டி சித்தர் ஜீவசமாதி கோவில் திறக்கப்படும் நேரம்:

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கோவிலின் நடை திறந்திருக்கும்.

மேலும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பூஜைகள் இங்கு நடைபெறும்.

• கணக்கன்பட்டி சித்தரின் ஜீவ சமாதியை பார்க்க வரும் பக்தர்களுக்கு இடைவிடாத அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும்.

• ஒரே நேரத்தில் ஆயிரம் வாகனங்கள் நிற்கக்கூடிய அளவிற்கு இங்கு இடங்கள் அமைந்துள்ளது.

• பழனியில் இருந்து கணக்கம்பட்டிக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு அரசு பேருந்து எந்நேரம் இயக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

1 COMMENT

  1. Your comment is awaiting moderation

    கோவை துடியலூர் ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் வருடாவருடம் குரு பூஜைக்கு சேவை செய்ய இங்கிருந்து சுமார் 10 பேர் வருகிறோம் என்னுடைய தாழ்மையான கருத்து :வருடாவருடம் சேவை செய்பவர்களுக்கு நிரந்தர ID கார்டு மற்றும் QR கொடுத்து விட்டால் வருடாவருடம் அப்ளிகேசன் ,ஆதார் ,போட்டோ அதற்காக ஆள் போட்டு வேலை செய்வது பளு குறையும் அவர்கள் அந்தந்த வருடம் கலந்து கொள்வதென்றால் லிங்க் அனுப்பி அனுமதி பெற்று சேவையில் கலந்து கொள்ளலாம்
    ஆதார்No.2291-6476-9079,Mobile number:9442018807

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here